search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியாறு அணை தண்ணீர் திறப்பு குறைப்பு"

    நீர்மட்டம் சரிந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. #MullaPeriyar #PeriyarDam
    கூடலூர்:

    நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்து விட்டதால் முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. ஆனால் வைகை அணையில் தேக்குவதற்காக தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.

    முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி நேற்றுவரை 1867 கன அடி நீர் திறக்கப்பட்டது. அது இன்று 1756 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் தண்ணீர் திறப்பை மேலும் குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.25 அடியாக உள்ளது. அணைக்கு 435 கன அடி நீர் வருகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 61.32 அடியாக உள்ளது. 1462 கன அடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 3460 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.62 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    சோத்துப்பாறை 2, கொடைக்கானல் 2.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #MullaPeriyar #PeriyarDam
    ×